ChatGPT வில்லைகள்
உரையாடல் அல்லது வார்ப்புருவைப் பயனர்கள் ஊடாடக்கூடிய வில்லைகளாக மாற்றுங்கள். திருத்தவும் பின்னூட்டம் வழங்கவும் உங்கள் குழுவை அழையுங்கள். அதற்கேற்ப மாற்றங்களைச் செய்யும் பொறுப்பை ChatGPT அல்லது உங்கள் dot வசம் விடுங்கள். ChatGPT-யில் விளக்கக்காட்சியை வழங்குங்கள் அல்லது PowerPoint அல்லது Google Slides-க்கு ஏற்றுமதி செய்யுங்கள்.
Pro, Business மற்றும் Enterprise திட்டங்களில் கிடைக்கிறது.

குழுவின் தற்போதைய நிலவரம் முதல் பெரிய யோசனைகள் வரை

குறைந்த கையுழைப்பில் சிறந்த விளக்கக்காட்சிகள்
தேவைக்கேற்ற படங்களை உருவாக்கியோ நீங்கள் பதிவேற்றும் படங்களைப் பயன்படுத்தியோ, உங்கள் யோசனைகளை நேர்த்தியான விளக்கக்காட்சியாக மாற்ற ChatGPT உதவும்.
ஒரே விளக்கக்காட்சியில் குழுவினருடன் இணைந்து பின்னூட்டத்தைப் பரிசீலியுங்கள். அதற்கேற்ப மாற்றங்களைச் செய்ய ChatGPT-யின் உதவியைக் கேளுங்கள்.
உங்கள் வில்லைகளின் பாணியையும் தளவமைப்பையும் வழிநடத்த, ChatGPT உடன் ஒரு மாதிரி விளக்கக்காட்சியைப் பகிருங்கள்.
உங்களுக்கு விருப்பமான விளக்கக்காட்சித் திருத்தியில், திருத்தக்கூடிய உள்ளடக்கத்தைத் தொடர்ந்து செம்மைப்படுத்துங்கள்.
நான்கு படிகளில் உங்கள் விளக்கக்காட்சியை உருவாக்குங்கள்
உரையாடல், கோப்புகள் அல்லது குறிப்புவரைவை வில்லைகளாக மாற்ற ChatGPT-யிடம் கேளுங்கள் அல்லது வார்ப்புருவிலிருந்து தொடங்குங்கள்.

உங்கள் வில்லைகளை உருவாக்கிச் செம்மைப்படுத்த ஒரு ப்ராம்ப்ட்டை முயற்சியுங்கள்